Friday, May 03, 2019

Machamuni rishiyar / Mandooga muni Rishiyar (மச்சமுனி/ மண்டூக ரிஷி)

Image result for machamuni

Machamuni rishiyar / Mandooga muni Rishiyar

We know that all of our Siddhars were in the cradle of the earth in the vicinity of the imagination. As long as they come out of the Samadhi, they will stay for a long time. Like some frogs and fishes *

In hot or frosty periods, the frogs are placed themselves in the underground beneath the earth, after absorbing excess water. It feeds on the outer skin of body and fat in its body. When the monsoon rains, the water begins to penetrate into the earth and then they realize it and come up to the earth and make a normal life casually. These are just as normal as what we have to do. How much Effective it is when we keep ourself in Samadhi (#Hibernation) state for few months.!!

Until then there was no frogs in the rain and we were surprised to see how frogs came in the few hours suddenly. Likewise, when the water drains in pond, fishes apply heavy mud over their body and hide themselves.. In its lungs, the excess oxygen is stored as in the frog. Nature is the Creator!

Who knows whether the Machamuni rishiyar / Mandooga muni Rishiyar are as a fish and frog doing Samadhi and coming from the Samadhi when it rains.!!!!

 

Tamil version
------------------

மச்சமுனி/ மண்டூக ரிஷி
 
நம் சித்தர்கள் எல்லோரும் கற்பம் உண்டபின் வாசியில் நிலைத்து பூமிக்கடியில் சமாதியில் இருந்ததை நாம் அறிவோம். சமாதிவிட்டு வரும்வரை அவர்கள் பலகாலங்கள் அப்படியே நிலைத்திருப்பார்கள். அவர்களைப்போலவே *சில வகையான தவளைகள், மீன்கள்* இப்படிச் செய்கிறது.

அதிக வெப்பம் அல்லது உறைபனி காலங்களில் பூமிக்கு அடியில் பதுங்கு குழி அமைத்து தவளைகள் தங்கிடும். அதிக நீரை உறிஞ்சிக் கொண்டபின் அங்கேபோய் பதுங்கும். தன் உடலிலுள்ள மேல்தோல் மற்றும் கொழுப்பை அது உணவாகக் கொண்டு உயிர்வாழும். நடமாட்டம் இல்லாததால் சக்தி வீணாகாது.. எப்போது பருவமழை பொழிகிறதோ, பூமிக்குள் நீர் ஊடுருவத் தொடங்குமோ அப்போது அதை உணர்ந்துகொண்டு பூமிக்கு மேலே வந்து இயல்பு வாழ்க்கை மேற்கொள்ளும். நாம் எதைச் செய்ய பிரயத்தனப் படவேண்டுமோ அதை இவை சாதாரண இயல்பாகச் செய்கிறது. சில மாதங்கள் #சமாதியில் இருந்துவிட்டு (#Hibernation) வருவது எத்தகைய பேறு!

அதுவரை தவளைகள் இல்லாத நிலத்தில், மழை பெய்ததும் இரண்டு சாமத்தில் திடீரென தவளைகள் எப்படி கபகபவென வந்தது என்று ஆச்சரியப் படுவோம். அதுபோல் மீன்களும் குளம் வற்றும்போது கனமாக சேறு பூசிக்கொண்டு உள்ளேபோய் பதுங்கும். அதன் நுரையீரலில் அதிகப்படியான பிராண வாயுவை தேக்கிக்கொண்டு தவளையைப்போலவே செயல்படும். இயற்கையின் சிருஷ்டி அலாதிதான்!

அதுவரை மீனாய் /தவளையாய் இருந்த மச்சமுனி/ மண்டூக ரிஷியார் கூட்டம் சமாதியில் இருந்துவிட்டு பூமிக்கு மேலே வருகிறார்களோ என்னவோ... யார் அறிவார்? பூமிக்குள்ளிருந்து வெளிவரும்போது அதைக் காண்பது சாப-பாவ விமோச்சனமே!

(Whatsapp forward from - *சித்தர்களின் குரல்*)

No comments:

Karna's previous birth secret (கர்ணனின் பூர்வ ஜென்ம இரகசியம் )

Do you know Karna's previous birth secret? The legend of the Mahabharata, Karna, is a pandava based is known to this world afte...