Friday, May 03, 2019

Why Dhritarashtra is blind? திருத்ராஷ்ட்ரனுக்கு ஏன் கண் குருடானது? Why he had hundred children? ஏன் அவனுக்கு நூறு குழந்தைகள்?

#Why Dhritarashtra is blind?
#Why did his hundred children dead?

The end of the battle of the Kurukshetra was completed by the Crowning Ceremony of Dharma.

By that time Dhritarashtra asked Krishna,

"Krishna, Although I was blind, I ruled with Dharma with the suggestions from Vidhura. Even then, What's the reason? why my hundred sons have died without even one is left?"

Krishna said without directly answering to it, "I'll tell you a story and then ask a question. If you answer me for that, then I'll answer you! "

Lord, said the following story.

Once upon a time, there was a poor man joined as a Cook to a Perfect King.
He gave special attention to King's food, more attention towards the taste, health etc..
So he become the Chief chef of the King's kitchen very soon.

One day, In order to introduce a different taste of the food to King, he had a very preposterous idea. Accordingly, he caught a Swan from the palace pool and cooked it secretly and served the food to the king.

Not knowing what is cooked, the king in the flavor of the appetite, loves it very much and had the food. As he felt delicious, he appreciated and commanded the cook for the same food often. Also he gifted the cook with gold and diamonds.


Dhritarashtra, now tell me ... Who is the most sinner among the King and Cook? The Lord asked.

Dhritarashtra with deep thought, replied to Krishna, "O! Krishna! Vasishthir's cook was unknowingly served the meat contained food on him. But Vasishthar found it and cursed him. But, This king does not have that discernment and warning!

Cooker's desired for money and gifts. So his mistake is legible. But for many days, it is the king who does not find that meat."

Krishna replied with Smiling eyes, "Dhritarashtra! I appreciated you for your jurisprudence, even if you are a king, You agreed that the King was not fair. Such a jurisprudence Keeps you in the House of Representatives Bhishma and Drona. Also A good wife and a hundred children with good life for you."

"But my narrated story is about you."

"You have eaten one hundred of your Swan chicks in the last birth. You have lost your hundred children that Swan chick's mothers have suffered from the tragedy and so you suffer the same."

"Even you were having eyes in last birth and you couldn't differentiate between vegetarian and non-vegetarian food in your previous birth, And then why do you need the eye? That is why you are blind in this birth."

"There is no injustice in the grace of the goddess. Everyone will live according to his own fate!" said Krishna.

Dhritarashtra realized that he had shot himself.



Note: ** Following Tamil version is received in whatsapp forward **



#திருத்ராஷ்ட்ரனுக்கு_ஏன்_கண் #குருடானது?#ஏன்_அவனுக்கு_நூறு #குழந்தைகள்?

குருசேஷத்திர போர் முடிந்து, தர்மருக்கு முடிசூட்டுவிழா நடந்துகொண்டிருந்தது.அப்போது திருதராஷ்டிரன், கிருஷ்ணரிடம்,

"கிருஷ்ணா நான் குருடனாய் இருந்தபோதிலும், விதுரர் சொல்கேட்டு தர்ம நியாயங்களுடன் அரசாட்சி செய்தேன்.அப்படியிருக்க ஒருவர்கூட மீதமில்லாமல் எனது நூறு மைந்தர்களும் இறந்ததற்குக் காரணம் என்ன?" என்றார்.

கிருஷ்ணர்அதற்கு நேரடியாக பதில் சொல்லாமல், "உனக்கு நான் ஒரு கதை கூறுகிறேன். அதன் பின் ஒரு கேள்வி கேட்கிறேன். நீ அதற்கு பதில் சொன்னால், நான் உனக்கு பதில் தருகிறேன்!" என்ற பகவான், கதையைக் கூறினார்.

"நீதி தவறாது ஆட்சி செய்த ஓர் அரசனிடம் மிகவும் வறியவன் ஒருவன் சமையற்காரனாகச் சேர்ந்தான்.மிகச் சுவையாக சமைப்பது, அரசரை பிரத்யேகமாகக் கவனிப்பது என அவன் எடுத்துக் கொண்ட முயற்சிகளினால் வெகு சீக்கிரமே தலைமை சமையல் கலைஞனாக உயர்த்தப்பட்டான்."

"அரசருக்கு வித்தியாசமான சுவையை அறிமுகப்படுத்தி பரிசு பெறும் நோக்கில், அவனுக்கு விபரீதமான யோசனை தோன்றியது. அதன்படி, அரண்மனைக் குளத்தில் இருந்த அன்னத்தின் குஞ்சு ஒன்றினைப் பிடித்து ரகசியமாய் சமைத்து, அரசருக்குப் பரிமாறினான்."

"தான் சாப்பிடுவது இன்னதென்று தெரியாமல் அப்பதார்த்தத்தின் சுவையில் மயங்கிய மன்னர், அதை மிகவும் விரும்பிச் சாப்பிட்டதோடு அடிக்கடி அதை சமைக்கவும் கட்டளை இட்டு, சமையற்காரனுக்கு பெரும் பரிசும் அளித்தார்."

"திருதராஷ்டிரா, இப்போது சொல்... அரசன், சமையல் கலைஞன் இருவரில் அதிகம் தவறிழைத்தவர் யார்? " என்று பகவான் கேட்டார்.

"வசிஷ்டரின் சமையற்காரன் தான் அறியாமலே புலால் கலந்த உணவை அவருக்கு வைத்து விட்டார். ஆயினும் வசிஷ்டர் அதைக் கண்டுபிடித்து, அவனுக்கு சாபமிட்டார்.அந்த விவேகமும் எச்சரிக்கையும் இந்த அரசனிடம் இல்லையே! சமையற்காரன் பணம், பரிசுகளுக்கு ஆசைப்பட்டிருப்பான். அதனால் அவன் செய்த தவறு சிறியது. ஆனால் பல நாட்கள் அசைவம் உண்டும் அதைக் கண்டுபிடிக்காத அரசன்தான் அதிக தவறிழைத்தவன் ஆகிறான்! " என்றார், திருதராஷ்டிரன்.

புன்னகைத்த கண்ணன்,

" திருதராஷ்டிரா! நீயும் ஓர் அரசனாக இருந்தும், நியாயம் தவறாது, மன்னவன் செய்ததே தவறு! என கூறினாய். அத்தகைய நீதி பரிபாலனம்தான் பீஷ்மர், துரோணர், போன்ற சான்றோர் சபையில் உன்னை அமர்த்தியது. நல்ல மனைவி,நூறு குழந்தைகள் என நல்வாழ்க்கையைத் தந்தது. ஆனால், நான் சொன்ன கதை உன்னைப் பற்றியதுதான்."

"சென்ற பிறவியில் நீயே உன் தவறால் நூறு அன்னக் குஞ்சுகளை உணவாகச் சாப்பிட்டிருக்கிறாய்.அந்த அன்னங்கள், அதன் தாயார் எத்தகைய துயரும், வேதனையும் அடைந்திருக்கும் என்பதை உன் நூறு பிள்ளைகளை இழந்து நீ அறிந்துகொள்கிறாய்."

"ஆனால் தினம் தினம் பார்த்தும் உனக்கு சைவ, அசைவ உணவுகளுக்கிடையே வேறுபாடு தெரியவில்லை. அப்புறம் உனக்கு, கண் எதற்கு? அதனாலேயே நீ குருடனானாய்."

"தெய்வத்தின் சன்னிதானத்தில் ஒரு போதும் நீதி தவறாது. அவரவர் வினைக்கேற்பவே அவரவர் வாழ்வு அமையும்!" என்றார்.

தன்வினையே தன்னைச் சுட்டதென்பதை உணர்ந்த திருதராஷ்டிரன் வாயடைத்து நின்றான்.

No comments:

Karna's previous birth secret (கர்ணனின் பூர்வ ஜென்ம இரகசியம் )

Do you know Karna's previous birth secret? The legend of the Mahabharata, Karna, is a pandava based is known to this world afte...